மாணவ-மாணவிகளுக்கு கெட்டுப்ேபான முட்டைகள் வழங்கப்பட்டதா?
ஆடுதுறை அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு கெட்டுப்போன முட்டைகளை வழங்கப்படுவதாக வந்த புகாரின் பேரில் பேரூராட்சி தலைவர், செயல் அலுவலர் திடீர் ஆய்வு செய்தனர்.;
திருவிடைமருதூர்,
மார்ச்.16-
ஆடுதுறை அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு கெட்டுப்போன முட்டைகளை வழங்கப்படுவதாக வந்த புகாரின் பேரில் பேரூராட்சி தலைவர், செயல் அலுவலர் திடீர் ஆய்வு செய்தனர்.
ெகட்டுப்போன முட்டைகள்
கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை கிருஷ்ணன் கோவில் தெருவில் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது இங்கு சுமார் 75 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.இங்கு மதிய உணவின்போது கெட்டுப்போன முட்டைகள் வழங்கப்படுவதாக ஆடுதுறை பேரூராட்சி நிர்வாகத்திற்கு தகவல் வந்தது.
பேரூராட்சி தலைவர் ஆய்வு
இந்த தகவலையடுத்து ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ம.க.ஸ்டாலின், பேரூராட்சி செயல் அலுவலர் ராம்பிரசாத், துணைத்தலைவர் கமலாசேகர், என்ஜினீயர் குமரேசன் ஆகியோர் பள்ளிக்கு நேரில் சென்றனர்.அங்குள்ள சத்துணவு கூடத்திற்கு சென்று ஆய்வு செய்தபோது அவித்த முட்டைகள் கூழ் முட்டைகளாக குவித்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதனைப் பார்த்த தலைவர், துணைத்தலைவர் மற்றும் அதிகாரிகள் சத்துணவு அமைப்பாளரிடம் இது குறித்து கேட்டனர்.அதற்கு அவர், இதுபோன்ற முட்டைகள்தான் பள்ளிக்கு வருவதாக தெரிவித்தார். இது குறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கும், கல்வி அதிகாரிகளுக்கும் உடனடியாக தகவல் தெரிவிக்கும்படி சத்துணவு அமைப்பாளருக்கு பேரூராட்சி தலைவர் அறிவுறுத்தினார்.பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கெட்டுப்போன முட்டை வழங்கப்பட்ட சம்பவம் சத்துணவு சாப்பிடும் மாணவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.