அர்த்தநாரீஸ்வரர் கோவில் தேரோட்டம்
உளுந்தூர்பேட்டை அருகே அர்த்தநாரீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.;
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர்கோட்டையில் பழமைவாய்ந்த அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், தேன் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. இதையடுத்து அலங்கரிக்கப்பட்ட தேரில் சிறப்பு அலங்காரத்தில் அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளினார். அப்போது சாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று வந்தது. இதில் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.