ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Update: 2022-07-03 16:35 GMT

ரிஷிவந்தியம், 

அர்த்தநாரீஸ்வரர் கோவில்

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியத்தில் பிரசித்திபெற்ற முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. மிகவும் பழமைவாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் பிரம்மோற்சவம் 11 நாட்கள் வெகுவிரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக நேற்று முன்தினம் மாலை விக்னேஸ்வரர் பூஜை, வாஸ்து சாந்தி உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தது. நேற்று மாலை 6 மணியளவில் முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரருக்கும், கோவில் வளாகத்தில் உள்ள கொடிமரத்துக்கும் சிறப்பு பூஜை செய்து, இரவு 7 மணியளவில் பிரம்மோற்சவ கொடி ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

11-ந்தேதி தேரோட்டம்

விழாவையொட்டி தினமும் இரவு வெவ்வேறு வாகனங்களில் பஞ்ச மூர்த்திகள் வீதிஉலா நடைபெற உள்ளது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 11-ந்தேதி (திங்கட்கிழமை) பிற்பகல் 3 மணியளவில் நடைபெற இருக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் ரிஷிவந்தியம் பகுதி மக்கள் செய்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்