ஆற்காடு அரசு பள்ளி மாணவிகள் வெற்றி
விளையாட்டு போட்டியில் ஆற்காடு அரசு பள்ளி மாணவிகள் வெற்றி பெற்றனர்.
ராணிப்பேட்டை மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டியில் ஆற்காடு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் கலந்துகொண்டு மாவட்ட அளவில் அதிக இடங்களில் முதல் இடம் பிடித்துள்ளனர். அவர்கள் மாநில அளவில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெற்றனர்.
வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது. ஆற்காடு தொகுதி ஜே.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ.கலந்து கொண்டு மாணவிகளை பாராட்டினார். இதில் ஆற்காடு நகர மன்ற தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன், திமிரி ஒன்றியக் குழு தலைவர் அசோக் மற்றும் பள்ளியின் கல்விக் குழு தலைவர், உறுப்பினர்கள், நகர மன்ற உறுப்பினர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டு மாணவிகளை பாராட்டினர்.