கட்டிட மேஸ்திரி தற்கொலை
கட்டிட மேஸ்திரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கன்னங்குறிச்சி:
சேலம் அய்யன்திருமாளிகை மேல்தெருவை சேர்ந்த கட்டிட மேஸ்திரி ரவிச்சந்திரன் (வயது 28). இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகனும், மகளும் உள்ளனர். ரவிச்சந்திரனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் மனம் உடைந்த ரவிச்சந்திரன் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.