ஏரல் மகளிர் பள்ளியில்குடற்புழு நீக்க மருத்துவ முகாம்

ஏரல் மகளிர் பள்ளியில் குடற்புழு நீக்க மருத்துவ முகாம் நடந்தது.

Update: 2023-02-14 18:45 GMT

ஏரல்:

ஏரல் பொது சுகாதாரம் மற்றும் மருந்து துறை சார்பில் மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மருத்துவ முகாம் ஏரல் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு ஏரல் பேரூராட்சி தலைவர் சர்மிளா தேவி மணிவண்ணன் தலைமை தாங்கி மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினார். மாவட்ட பூச்சியியல் வல்லுநர் கருப்பசாமி தேசிய குடற்புழு நீக்க திட்டம் பற்றி விளக்கம் அளித்தார். ஏரல் வட்டார மருத்துவ அலுவலர் தினேஷ், பேரூராட்சி செயல் அலுவலர் தனசிங், சுகாதார ஆய்வாளர் பிச்சாண்டி மற்றும் அகஸ்டின், ஜெயக்குமார், பகுதி சுகாதார செவிலியர் பவுல் ஆக்னஸ் ஜீவரத்தினம், கிராம சுகாதார செவிலியர் எலிசபெத் ராணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்