வசந்தபுரம் மலையில் அரக்கோணம் ராஜாளி கடற்படை வீரர்கள் பயிற்சி

வசந்தபுரம் மலையில் அரக்கோணம் ராஜாளி கடற்படை வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர்.

Update: 2022-11-26 13:57 GMT

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள வசந்தபுரம் கிராமத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் அரக்கோணம் ராஜாளி கடற்படை வீரர்கள் வந்தனர். பின்னர் அவர்கள் அங்குள்ள மலையில் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டனர்.

வழக்கமாக கடற்படை வீரர்கள், இரும்பிலி ஆணைக்கல் சரகத்தில் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். ஆனால் தற்போது வசந்தபுரம் மலையில் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்