மாயமாகும் மாணவிகளை மீட்க உரிய நடவடிக்கை

விருதுநகர் மாவட்டத்தில் மாயமாகும் மாணவிகளை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட போலீஸ் நிர்வாகத்திற்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

Update: 2022-10-30 19:35 GMT


விருதுநகர் மாவட்டத்தில் மாயமாகும் மாணவிகளை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட போலீஸ் நிர்வாகத்திற்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதிகரிப்பு

விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு காலத்திற்கு பின்பு பள்ளி, கல்லூரி மாணவிகள் மாயமாகும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களில் உள்ள மாணவிகள் திடீரென மாயமாகும் நிலை உள்ளது. மொத்தத்தில் வேலைக்கு செல்லும் பெண்கள் மாணவிகள் மாயமாகும் நிலை அதிகரித்து வருகிறது.

கொரோனா பாதிப்பு காலத்தில் ஆன்லைன் முறையில் கற்றல் பணி நடைபெறும் போது பெற்றோர் கிராமப்புறங்களிலும், நகர்புறங்களிலும் மாணவ- மாணவிகளுக்கு செல்போன் வாங்கி கொடுத்த நிலையில் அதன் பயன்பாடு கற்றல் பணிக்கு மட்டுமல்லாமல் இம்மாதிரியான தேவையற்ற தொடர்புகள் ஏற்படவும் வாய்ப்பை ஏற்படுத்தி விட்டது.

மாயமானவர்கள் மீட்பு

இதனால் பள்ளி மாணவ-மாணவிகள் தேவையற்ற தொடர்புகளை ஏற்படுத்தி கொண்டு திடீரென மாயமாகி விடும் நிலை தொடர்கிறது.

எனவே மாவட்ட போலீஸ் நிர்வாகம் இந்த மாதிரியான பிரச்சினைகளை தவிர்க்க பள்ளி, கல்லூரிகளில் மாணவிகளிடையே விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் மாயமாகும் மாணவிகள் மற்றும் இளம் பெண்கள் இருக்குமிடம் கண்டறிந்து அவர்களை பெற்றோரிடம் ஒப்படைக்க உரிய முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட போலீஸ் நிர்வாகத்திற்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்