தூத்துக்குடி மாவட்டத்திலசிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பாராட்டு

தூத்துக்குடி மாவட்டத்திலசிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.;

Update: 2022-09-23 18:45 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றும் போலீசாருக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டப்பட்டு வருகின்றனர். அதன்படி கடந்த மாதம் சிறப்பாக செயல்பட்டதாக 5 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 34 போலீசாருக்கும், தூத்துக்குடி மாவட்ட பகுதிகளில் எதிர்பாராதவிதமாக நீர்நிலைகளில் முழ்கி உள்ளே சிக்கிக்கொண்டு இறந்தவர்களின் உடல்களை மீட்க போலீசாருக்கு உதவி செய்து வருகிற தூத்துக்குடி 3-வது மைல் பகுதியை சேர்ந்த தன்னார்வலர் பங்குராஜ் மகன் செல்வம் என்பவரின் தன்னலமற்ற பணியை பாராட்டியும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பரிசு வழங்கி பாராட்டினார்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி தலைமையிடத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், தூத்துக்குடி ஊரக உதவி போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்