காமன்வெல்த் போட்டியில் தங்க பதக்கம் வென்றபத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்பயிற்சி கழக வீரருக்கு பாராட்டு

காமன்வெல்த் போட்டியில் தங்க பதக்கம் வென்ற பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்பயிற்சி கழக வீரருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Update: 2023-01-16 22:41 GMT

சேரன்மாதேவி:

காமன்வெல்த் போட்டியில் இந்திய அணியின் சார்பில் வலுதூக்கும் போட்டியில் பங்கேற்ற நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நவீன உடற்பயிற்சி கழக வீரரும், பாளையங்கோட்டை தலைமை அஞ்சலக ஊழியருமான சிவராமலிங்க ரவி 120 கிலோ உடல் எடை பிரிவில் 4 பிரிவுகளில் முதலிடம் பிடித்து 4 தங்கப்பதக்கங்களை வென்றார்.

சென்னையில் நடந்த நிகழ்ச்சியில், சாதனை படைத்த வீரர் சிவராமலிங்க ரவியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பாராட்டினர்.

தமிழ்நாடு வலுதூக்கும் சங்க தலைவர் ராஜா எம்.எல்.ஏ., செயலாளர் நாகராஜன், மூத்த தலைவர் ஹரிதாஸ், துணைத்தலைவர் லோகநாதன், சங்க புரவலர் மோகன் சங்கர், துணைத்தலைவர் ஆறுமுகம், நெல்லை மாவட்ட வலுதூக்கும் சங்க செயலாளர் சண்முகசுந்தரம், பொருளாளர் தளவாய்மூர்த்தி, துணைத்தலைவர் சரவணகுமார், செல்வகுமார், சர்வதேச வலுதூக்கும் வீரர் உதயகுமார், நெல்லை மாவட்ட ஆணழகன் சங்க செயலாளர் கல்லத்தியான், செல்வகுமார், முத்துபாண்டியன் மற்றும் பலர் பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்