சாதனை படைத்த மாணவிக்கு பாராட்டு
பேச்சுபோட்டியில் சாதனை படைத்த மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
சிவகாசி,
தமிழ்நாடு அரசு சார்பில் மாநில சிறுபான்மை ஆணையம் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கான ஆங்கில பேச்சு போட்டியை நடத்தியது. இதில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் படிக்கும் ஆங்கிலத்துறை 2-ம் ஆண்டு மாணவி சக்திகிருபா, மானுட சேவையின் தேவை என்ற தலைப்பில் பேசி மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.20 ஆயிரம் பெற்றார். அவரை பள்ளியின் செயலர் ஏ.பி.செல்வராஜன், முதல்வர் பாலமுருகன், ஆங்கிலத்துறை தலைவர் பெமினா, பேராசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.