மாணவர்களுக்கு பாராட்டு விழா

பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.;

Update: 2023-05-17 19:00 GMT

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே உள்ள சண்முகநல்லூர் ஸ்ரீ சுவர்ண வித்யாஷ்ரம் பள்ளியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. ஸ்ரீ சுவர்ண வித்யாஷ்ரம் அறக்கட்டளை உறுப்பினர் மாரியப்பன் தலைமை தாங்கினார். பள்ளியின் முதன்மை ஆலோசகர் ஜி.பி. அய்யர் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் தனலட்சுமி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். முதல் மதிப்பெண் பெற்ற மனீஸ்வர், 2-ம் இடம் பிடித்த சஞ்சய், 3-வது இடம் பிடித்த ரித்திகா சர்மா ஆகிய தங்க நாணயங்கள் பரிசாக வழங்கப்பட்டது. 100-க்கு 100 மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கும், வழிகாட்டிய ஆசிரியர் சாந்தகுமாருக்கு தங்க நாணயம் வழங்கப்பட்டது.



Tags:    

மேலும் செய்திகள்