சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பாராட்டு விழா

கே.எம்.சி.எச். மருத்துவமனையில் ஜார்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

Update: 2023-07-06 21:30 GMT

கே.எம்.சி.எச். மருத்துவமனையில் ஜார்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

ரூ.2.11 கோடி நிவாரண நிதி

கோவையில் உள்ள கே.எம்.சி.எச். மருத்துவமனையில் ஜார்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பாராட்டு விழா மற்றும் பிரதமர் நிவாரண நிதி வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் பாரதீய ஜனதா மாநில தலைவர் அண்ணா மலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

கே.எம்.சி.எச். மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்லா ஜி.பழனிசாமி, பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.2 கோடியே 11 லட்சத்தை சி.பி.ராதாகிருஷ்ணனிடம் வழங்கினார். மேலும் அவர், இந்த மருத்துவமனை சார்பில் பல்வேறு சமுதாயப்பணிகளுக்கு ரூ.16 கோடியே 21 லட்சம் வழங்கப்பட்டு உள்ளது என்றார்.

பெயர் பெற வேண்டும்

விழாவில் ஜார்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசும்போது கூறியதாவது:-


கே.எம்.சி.எச். மருத்துவமனை சிறப்பாக மருத்துவ சேவையாற்றி வருகிறது. புற்றுநோயை ஒழிக்க இந்த மருத்துவ மையம் மருந்து கண்டுபிடித்து உலக அளவில் பெயர் பெற வேண்டும்.


தமிழகத் தில் ஒருவர் சாதாரண போலீசாக இருந்தாலும் வேலையை விடமாட்டார். ஆனால் ஐ..பி.எஸ். பதவியை விட்டுவிட்டு மக்கள் பணியாற்ற அண்ணாமலை வந்திருக்கிறார் என்றால் நாம் அவரை பாராட்டியே ஆக வேண்டும்.


விடிவுகாலம்


தமிழகத்தில் ஆளும் அதிகாரத்திற்கு எதிராக ஓங்கி ஒரு குரல் ஒலிக்கிறது என்றால் அது அண்ணாமலையால் மட்டுமே முடியும். தமிழகத்தை ஆளும் நிலைக்கு அண்ணாமலை வந்தால் தமிழக மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைவார்கள்.


எதிர்ப்புகள் எந்த ரூபத்தில் வந்தாலும் அண்ணாமலை அதை சவாலாக எடுத்து கொண்டு செயல்பட வேண்டும். அவர் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் வெற்றியாக அமையும். ஒரு நாள் நீங்கள் தமிழகத்திற்கும் தலைவராக வர வேண்டும். அது தமிழகத்திற்க்கு நல்ல விடிவு காலமாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.


கவுரவம்

விழாவில் அண்ணாமலை பேசும்போது கூறியதாவது:-


கொங்கு வாசனை குறையாதவர் சி.பி.ராதாகிருஷ்ணன். அவர் எதிலும் 100-க்கு 100 வாங்கும் வேலை திறன் உடையவர். கட்சிக் காக சொந்த சொத்துகளை விற்றவர் சி.பி.ராதாகிருஷ்ணன்.

அவர், ஜார்கண்ட் மாநிலத்தில் தமிழ்நாடு மற்றும் கொங்கு பகுதியின் பெருமையை உயர்த்தி உள்ளார். அவரை கவுரவப்படுத்துவது எங்கள் ஒவ்வொருவரையும் கவுரவப்படுத்துவது ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.


விழாவில், கே.எம்.சி.எச்.மருத்துவமனை துணைத்தலைவர் தவமணி தேவி, மருத்துவமனை இயக்குனர் டாக்டர் முருகன், மொடக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ. சரசுவதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்