அரசு ஆஸ்பத்திரி டாக்டர், நர்சுகளுக்கு பாராட்டு

இளையான்குடி அரசு மருத்துவமனையில் மருத்துவர் குழுவினருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

Update: 2023-02-23 18:45 GMT

இளையான்குடி

இளையான்குடி அரசு மருத்துவமனையில் கர்ப்பப்பை அகற்றும் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் குழுவினருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் நஜுமுதீன் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் கோபிநாத் முன்னிலை வகித்தார். முன்னதாக எக்ஸ்ரே நிபுணர் சாமுவேல் பாண்டித்துரை அனைவரையும் வரவேற்றார்.

தலைமை டாக்டர் கிஷோர்குமார், அறுவை சிகிச்சை நிபுணர்கள் சரண்குமார், சரண்ராஜ், தினகரன் மற்றும் டாக்டர்கள், நர்சுகள் அனைவரின் சேவையை பாராட்டினார்கள். தனியார் ஆஸ்பத்திரியில் ரூ.3 லட்சத்துக்கு மேல் ஆகும் செலவை இளையான்குடி அரசு ஆஸ்பத்திரியில் இலவசமாக அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. அரசு ஆஸ்பத்திரியை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என செயல் அலுவலர் கோபிநாத் கேட்டுக்கொண்டார். நிகழ்வில் பேராசிரியர் செய்யது உசேன் மருத்துவ குழுவினருக்கு வாழ்த்துரை வழங்கினார். முடிவில் சமூக ஆர்வலர் அப்துல் மாலிக் நன்றி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்