ஐ.எப்.எஸ். தேர்வில் வெற்றி பெற்றவருக்கு பாராட்டு விழா

செங்கோட்டை அரசு நூலகத்தில் ஐ.எப்.எஸ். தேர்வில் வெற்றி பெற்றவருக்கு பாராட்டு விழா நடந்தது;

Update:2022-10-13 00:15 IST

செங்கோட்டை:

கடையநல்லூர் முத்து கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த குருசாமி மகன் சுப்புராஜ் என்பவர் ஐ.எப்.எஸ். தேர்வில் வெற்றி பெற்று தற்போது வனத்துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். அவருக்கு வாசகர் வட்டம் சார்பில் செங்கோட்டை அரசு நூலகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. வாசகர் வட்டத்தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஆதிமூலம், விழுதுகள் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாசகர் வட்ட இணைச்செயலாளர் செண்பக குற்றாலம் வரவேற்று பேசினார்.

நிகழ்ச்சியில் வேலைவாய்ப்பு அலுவலர் ரம்யா, அகடாமி இயக்குனர் மாரியப்பன், ஜே.பி. கல்வியியல் கல்லூரி முதல்வர் ஜான் கென்னடி, ஆகாஷ், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கத்தலைவர் ஜவகர்லால் நேரு, டேனியல் கல்லூரி நூலகர் ஏஞ்சலின் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பின்னர் சுப்புராஜ் தான் தேர்வில் வெற்றி பெற்ற வழிமுறைகளை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

முடிவில் நூலகர் ராமசாமி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்