அதிக மதிப்பெண் பெற்ற மாணவிக்கு நீதிபதி பாராட்டு
அதிக மதிப்பெண் பெற்ற மாணவிக்கு நீதிபதி பாராட்டு தெரிவித்தார்.
இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் 8-வது மாநாடு மதுரையில் நேற்று நடந்தது. இதில் பிளஸ் 2-வில் தமிழகத்தின் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி நந்தினிக்கு சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா, ஓய்வு பெற்ற நீதிபதி விமலா ஆகியோர் நினைவு பரிசு வழங்கி பாராட்டினர். உடன் வக்கீல்கள் ஐசக் மோகன்லால், சாமித்துரை மற்றும் பலர் உள்ளனர்.