மாணவிக்கு கலெக்டர் பாராட்டு
பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிக்கு கலெக்டர் பாராட்டு தெரிவித்தார்
திருப்புவனம்
திருப்புவனத்தில் உள்ள காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ஹரிணி, நடைபெற்று முடிந்த பிளஸ்-2 பொதுத்தேர்வில் சிவகங்கை மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்ணாக 596 பெற்றுள்ளார். மாணவியை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி சிவகங்கை கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்து பாராட்டி பரிசு வழங்கியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் மற்றும் பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், மாணவியின் பெற்றோர் ஆகியோர் கலந்து கொண்டனர். மாணவி ஹரிணி தமிழ் 99, ஆங்கிலம் 97, கணக்குப்பதிவியல் 100, வணிகவியல் 100, பொருளியல் 100, கணினி அறிவியல் 100 என மொத்தம் 596 மார்க்குகள் பெற்றுள்ளார். மூன்று பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.