விருது பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு
விருது பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது
தேவகோட்டை.-
தேவகோட்டை அருகே உள்ள புளியால் அரசு உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் ஜோசப் இருதயராஜிக்கு கலாம் சேவை விருது, கேடயம், பதக்கம், சான்றிதழ் ஆகியவற்றை லீலாக்கலை மற்றும் விளையாட்டு குழுமம் வழங்கியது. இதற்கான விழா திண்டுக்கலில் நடந்தது. விழாவில் இந்த குழுமத்தின் மாநில தலைவர் லீலா மற்றும் ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆரோக்கியசாமி ஆகியோர் ஆசிரியருக்கு விருதை வழங்கினா். இ்ந்த விருது பெற்ற ஆசிரியர் ஜோசப் இருதயராஜி பள்ளித் தலைமையாசிரியர் நாகேந்திரன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஜோசப், உதவித் தலைமையாசிரியை விமலா, ஆசிரியர், ஆசிரியைகள், அலுவலர்கள் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.