சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு

ஒன்றிய அளவில் செஸ் போட்டியில் சாதனை படைத்த அதிகாரப்பட்டி அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Update: 2022-07-22 16:39 GMT

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய அளவில் பள்ளி மாணவர்களுக்கு செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் அதிகாரப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் 3 பிரிவுகளின் கீழ் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்றனர். இப்பள்ளி மாணவ-மாணவிகள் ஆகாஷ், மிதுனா, கோபிகா, சித்தார்த்தன், வான்மதி, பாலாஜி ஆகியோர் வெற்றி பெற்று சாதனை படைத்தனர். இந்த மாணவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வம், உதவி தலைமை ஆசிரியர் சார்லஸ் ஜேம்ஸ், உடற்கல்வி ஆசிரியர்கள் சக்திவேல், பிரபு, அருணாவதி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்