90 போலீஸ்காரர்களுக்கு பணி நியமன ஆணை

தூத்துக்குடியில் 90 போலீஸ்காரர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.;

Update: 2023-05-26 18:45 GMT

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 2022-ம் ஆண்டுக்கான இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் தீயணைப்புத்துறை வீரர் ஆகிய பதவிகளுக்கு தேர்வு நடந்தது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை இரண்டாம் நிலை காவலராக தேர்வாகியுள்ள 63 ஆண்கள் மற்றும் 27 பெண்கள் என மொத்தம் 90 பேருக்கு தூத்துக்குடி தலைமையிடத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பணி நியமன ஆணை வழங்கி அறிவுரைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

இவர்களுக்கு சேலம், திருச்சி மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் வருகிற 1-ந் தேதி முதல் பயிற்சி தொடங்குகிறது. நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் அலுவலக அமைச்சுப்பணி நிர்வாக அதிகாரி குமார், அலுவலக கண்காணிப்பாளர்கள் சுப்பிரமணியன் மற்றும் அமைச்சுப்பணி உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்