வேலைவாய்ப்பு முகாமில் 494 பேருக்கு பணி நியமன ஆணை

வேலைவாய்ப்பு முகாமில் 494 பேருக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் நாசர் வழங்கினார்.

Update: 2023-03-19 12:03 GMT

திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பாக பட்டாபிராம் அடுத்த இந்து கல்லூரியில் நேற்று காலை மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலையில் தொடங்கி வைத்தார். இந்த முகாமில் 179 நிறுவனங்களும் 8 திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்களும் கலந்து கொண்டனர். இதில் 494 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் நாசர் வழங்கினார்.

இதைபோல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பாக தூய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ் ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மையினை செழுமைப்படுத்தும் பொருட்டு 5 ஊராட்சிகளுக்கு ரூ.42.5 லட்சம் மதிப்பீட்டிலான டிராக்டர்களையும், 50 ஊராட்சிகளுக்கு ரூ.1.32 கோடி மதிப்பீட்டிலான மின்கலன் இயக்கு வாகனங்களை வழங்கி அவற்றை பயன்பாட்டுக்கு அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் எம்.எல்.ஏ. ராஜேந்திரன், திருத்தணி எம்.எல்.ஏ. சந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்