வேலைவாய்ப்பு முகாமில் 48 பேருக்கு பணி நியமன ஆணை
விழுப்புரத்தில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் 48 பேருக்கு பணி நியமன ஆணை;
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் 27 தனியார் துறை வேலையளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்கு தேவையான பணி நாடுனர்களை தேர்வு செய்தனர். காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற்ற இம்முகாமில் 221 பணிநாடுனர்கள் கலந்துகொண்டனர். இம்முகாமை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் உதவி இயக்குனர் பாலமுருகன் பார்வையிட்டு தேர்வு செய்யப்பட்ட 48 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கினார்.