34 பேருக்கு பணி நியமன ஆணை
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வில் வெற்றி பெற்ற 34 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 2022-ம் ஆண்டு நடத்தப்பட்ட இரண்டாம் நிலை காவலர்களுக்கான தேர்வில் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 24 ஆண்கள், 10 பெண்கள் என 34 நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தேர்வான 34 பேருக்கும் திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் பணிநியமன ஆணையை வழங்கி சிறப்பாக பணியாற்ற அறிவுரைகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.