தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட 20 பேருக்கு பணி நியமன ஆணை

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் சி.வெ.கணேசன் வழங்கினார்.

Update: 2024-06-14 16:39 GMT

சென்னை,

தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

"தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட தேர்வுகளில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் பயிற்சி பிரிவில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பணிபுரிய தேர்வு செய்யப்பட்ட 18 விடுதிக் கண்காணிப்பாளர், உடற்பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கு மற்றும் கருணை அடிப்படையில் இருவர் என மொத்தம் 20 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை, சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (14.06.2024) நடைபெற்ற நிகழ்ச்சியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், குமார் ஜயந்த், இ.ஆ.ப., அரசுக் கூடுதல் தலைமைச் செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, எ.சுந்தரவல்லி, இ.ஆ.ப., ஆணையர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்."

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்