1,116 பேருக்கு பணி நியமன ஆணை

1,116 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

Update: 2023-01-28 19:01 GMT

அருப்புக்கோட்டை, 

விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் அருப்புக்கோட்டையில் எஸ்.பி.கே. கல்லூரியில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் 154 தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டன.. வேலை நாடுனர் 5,174 பேர் கலந்து கொண்டனர். இதில் 2,383 ஆண்களும், 2,715 பெண்களும், 5 திருநங்கைகளும், 12 இலங்கை தமிழர்களும், 17 ஆதரவற்ற பெண்களும், 42 மாற்றுத்திறனாளிகளும் கலந்து கொண்டனர். இதில் 1,116 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இதில் ஆண்கள் 563 பேரும், பெண்கள் 550 பேரும், திருநங்கை ஒருவரும், மாற்றுத்திறனாளிகள் 2 பேரும் அடங்குவர். 183 பேர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். தேர்வு செய்யப்பட்டோருக்கு மாவட்ட வருவாய் அதிகாரி ரவிக்குமார் பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் வீரராகவராவ், முன்னாள் நகர் மன்ற தலைவர் சிவப்பிரகாசம், ஆர்.டி.ஓ. கல்யாண் குமார், தாசில்தார் அறிவழகன், நகராட்சி ஆணையர் அசோக்குமார், கல்லூரி செயலாளர் குணசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் கல்லூரி தலைவர் ஞான கவுதமபாண்டியன் நன்றி கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்