கருணாநிதியின் நூற்றாண்டு விழா:வேலைவாய்ப்பு முகாமில் 756 பேருக்கு பணி நியமன ஆணை

கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி நடந்த வேலைவாய்ப்பு முகாமில் 756 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

Update: 2023-10-18 17:29 GMT

ஓசூர்

ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்தின. கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க், ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தனர். இதில் பல்வேறு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு ஆட்களை தேர்வு செய்தனர். முகாமில் 756 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இணை இயக்குனர் லதா, தொழில் பாதுகாப்பு இணை இயக்குனர் சபீனா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர், துணை இயக்குனர் இளவரசி, உதவி இயக்குனர் திவ்யதர்ஷனி மாவட்ட தொழில் மைய மேலாளர் பிரசன்ன பாலமுருகன், திறன் மேம்பாட்டு உதவி இயக்குனர் பன்னீர்செல்வம், மாநில ஊரக வாழ்வாதார இயக்க உதவி திட்ட அலுவலர்கள் சந்தோசம், ரகு, ஓசூர் மாநகராட்சி பொது சுகாதாரக்குழு தலைவர் மாதேஸ்வரன், மண்டல குழுத்தலைவர் ரவி, மாநகராட்சி கவுன்சிலர்கள் சென்னீரப்பா, நாகராஜ், மஞ்சுளா, முனிராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசமூர்த்தி, பூபதி மற்றும் பல்வேறு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்