பொங்கல் பரிசு வழங்கும் பணியை கண்காணிக்க சிறப்பு அலுவலர்கள் நியமனம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் பணியை கண்காணிக்க சிறப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்;

Update: 2023-01-08 18:45 GMT

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கண்காணிப்பு அலுவலர்கள்

இதைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் பணியை கண்காணிக்கவும் மேற்பார்வை செய்யவும் தகுதியான நபர்களுக்கு தரமான பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யவும், ஒவ்வொரு தாலுகாவுக்கும் துணை கலெக்டா் நிலையில் சிறப்பு கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி கள்ளக்குறிச்சி தாலுகாவுக்கு வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா(9445000421), சின்னசேலம் தாலுகா-மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கவியரசு(9488709545), கல்வராயன்மலை தாலுகா-உதவி ஆணையர்(கலால்) ராஜவேல்(9894801844), சங்கராபுரம் தாலுகா-திட்ட அலுவலர் பழங்குடியினர் நலம் கதிர்சங்கர் (6369297401), திருக்கோவிலூர் தாலுகா- கோட்டாட்சியர் யோகஜோதி (9445000422), உளுந்தூர்பேட்டை தாலுகா-மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர் ஜெயக்குமார்(9841802282) ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

புகார்களை தெரிவிக்கலாம்

மேலும் பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப்பணம் ரூ.ஆயிரம் வழங்குவதை கண்காணிக்க கள்ளக்குறிச்சி மாவட்ட அளவில் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண்(04151-228801) வாயிலாகவும், துணை பதிவாளர்(பொதுவிநியோகத்திட்டம்) அலுவலக கட்டுப்பாட்டு அறை எண்(04151-226422) வாயிலாகவும், வட்ட அளவிலும் மற்றும் கட்டணமில்லா தொலைப்பேசி எண் 1967 மற்றும் 1800,425,5901 என்ற எண்களுக்கும் புகார்களை தெரிவிக்கலாம்.

பொங்கல் பரிசு இன்று(திங்கட்கிழமை) முதல் பொங்கல் பண்டிகைக்கு முன்பு வரை தொடர்ந்து வழங்க வேண்டும் என்பதற்காக ரேஷன் கடைகளுக்கு வருகிற 13-ந் தேதி(வெள்ளிக்கிழமை) பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நெரிசலை தவிர்க்க...

கூட்ட நெரிசலை தவிர்க்க நாள் ஒன்றுக்கு 200 முதல் 250 பேருக்கு பொங்கல் பரிசு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப்பணம் ரூ.ஆயிரம் வழங்கப்படும். குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்களில் எவரேனும் ஒருவர் பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப்பணம் ஆகியவற்றை பெற்றுக்கொள்ளலாம். பொங்கல் பரிசு வழங்கப்பட்டதும் குடும்பஅட்டைதாரர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்