"நெல் கொள்முதலை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகள் நியமனம்" - தமிழக அரசு உத்தரவு
டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதலை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை,
கடலூர், வேலூர், திருவள்ளூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெறும் நெல் கொள்முதலை கண்காணிக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
விவசாயிகளுக்கு அரசு அறிவித்துள்ள குறைந்த பட்ச ஆதாரவிலை கிடைப்பதையும் கண்காணிக்க உத்தரவு கடலூருக்கு ராஜாராமன், தஞ்சாவூருக்கு சிவஞானம், திருவள்ளூருக்கு கற்பகம், திருநெல்வேலிக்கு சங்கர் என ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனியாக கண்காணிப்பு அதிகாரிகள் நியமித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இவர்கள் விவசாயிகளிடம் நெல் குறைந்தபட்ச ஆதார விலைக்கு வாங்கப்படுகிறதா என்பதை கண்காணிப்பார்கள்.