மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனராக நாகராஜமுருகன் நியமனம்: கல்வித்துறை உத்தரவு

மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனராக நாகராஜமுருகனை நியமனம் செய்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-11-01 23:22 GMT

கோப்புப்படம் 

சென்னை,

மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனராக இருந்த அ.கருப்பசாமி ஓய்வு பெற்றதை தொடர்ந்து, அந்த இடத்துக்கு புதிய இயக்குனரை நியமித்து அரசு உத்தரவிட்டு இருக்கிறது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-

மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனராக பணியாற்றி வந்த அ.கருப்பசாமி வயது முதிர்வின் காரணமாக பணியில் இருந்து ஓய்வு பெற அனுமதித்து ஆணை வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1.11.22 முதல் காலியாக இருக்கும் இயக்குனர் பணியிடத்துக்கு, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி கூடுதல் உதவி திட்ட இயக்குனர் எஸ்.நாகராஜமுருகனை நியமனம் செய்து அரசு ஆணையிடுகிறது.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்