மோகன் சுப்பிரமணியன் நியமனம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

ஐ.நா அமைதிப் படையின் புதிய கமாண்டராக மோகன் சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Update: 2022-07-06 13:14 GMT

சென்னை,

தெற்கு சூடானில் ஐ.நா அமைதிப் படையின் புதிய கமாண்டராக மோகன் சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், புதிய கமாண்டராக நியமிக்கப்பட்ட மோகன் சுப்பிரமணியனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

"தெற்கு சூடானில் ஐ.நா. அமைதிப் படையின் புதிய கமாண்டராக மோகன் சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளது பெருமைக்குரியது. தனது பழுத்த அனுபவத்தைப் பயன்படுத்தி தெற்கு சூடானில் அமைதியும், நல்லிணக்கமும் தழைக்க சுப்பிரமணியன் பணியாற்றுவார் என நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்