இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் ஆகிய திட்டங்களை கண்காணிக்க மாவட்ட அளவிலான அதிகாரிகள் நியமனம்

தமிழக அரசின் திட்டங்கள் பள்ளி மாணவர்களை சென்றடைவதை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Update: 2023-07-06 09:59 GMT

சென்னை,

கொரோனா தொற்று காலகடத்தில் ஊரடங்கு காரணமாக 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களின் கற்றல் இழப்புகளை சரி செய்ய தமிழ்நாடு அரசு 'இல்லம் தேடி கல்வி' திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன்படி மாணவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகிலேயே 'இல்லம் தேடிக் கல்வி' மையங்களில் கற்பித்தல் சேவை வழங்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான இளைஞர்கள் இத்திட்டத்தின் கீழ் தன்னார்வலர்களாக சேர்ந்து பணியாற்றி வருகின்றனர்.

அதே போல் கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு தொடக்கக் கல்வியில் ஏற்பட்ட தேக்கத்தை சரிசெய்ய மாநில அரசு 'எண்ணும் எழுத்தும்' திட்டத்தை கொண்டுவந்தது. கொரோனா தொற்றால் 2 ஆண்டுகள் பள்ளிகள் நேரடியாக செயல்படாத நிலையில் கற்றலில் மாணவர்களிடம் ஏற்பட்ட இடைவெளியை படிப்படியாக குறைக்க இத்திட்டம் கொண்டு வரப்பட்டது.

இந்த நிலையில் தமிழக அரசின் திட்டங்கள் பள்ளி மாணவர்களை சென்றடைவதை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் ஆகிய திட்டங்களை கண்காணிக்க மாவட்ட அளவிலான அதிகாரிகள் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்