திண்டுக்கல்லை அடுத்த காந்திகிராம பல்கலைக்கழகத்தில் சேர விண்ணப்பிக்கலாம்
திண்டுக்கல்லை அடுத்த காந்திகிராம பல்கலைக்கழகத்தில் சேர விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல்லை அடுத்த காந்திகிராமத்தில், காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் நடப்பு கல்வியாண்டிற்கான (2023-24) இளநிலை மற்றும் முதுநிலை பட்டபடிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இந்த பட்டப்படிப்புகளில் சேர வேண்டும் என்றால் பல்கலைக்கழகத்தில் பொது நுழைவுத்தேர்வான 'க்யூட்' தேர்வு எழுத வேண்டும். இந்த நுழைவுத்தேர்வு வருகிற 28-ந்தேதி தொடங்கி நடைபெற உள்ளது. தேர்வு முடிந்தபிறகு அதன் மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
இதேபோல் பல்கலைக்கழகத்தின் பிறபடிப்புகளுக்கான முதுகலை டிப்ளமோ, டிப்ளமோ, பி.வோக் (B.Voc) டி.வோக் (D.Voc) மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு நேரடி மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. எனவே இந்த படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் பல்கலைக்கழக இணையதளமான www.ruraluniv.ac.in வழியாக விண்ணப்பிக்கலாம்.
இந்த தகவலை காந்திகிராம பல்கலைக்கழகம் நிர்வாகம் தெரிவித்துள்ளது.