சுற்றுலா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

சுற்றுலா விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2022-08-24 18:22 GMT

தமிழ்நாடு சுற்றுலாத்துறை தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் உலக சுற்றுலா தினத்தன்று சுற்றுலா விருதுகள் வழங்க உள்ளது. இந்த ஆண்டு விருது வழங்குவதற்கான அறிவிப்பு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை சுற்றுலாத்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி சுற்றுலா ஆபரேட்டர்கள், விமான நிறுவனங்கள், ஓட்டல்கள், உணவகங்கள், சுற்றுலா வழிகாட்டிகள் உள்ளிட்ட 15 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட உள்ளது. எனவே ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தொழில் முனைவோர்கள் www.tntourismawards.com என்ற இணையதளத்தில் நாளைக்குள் (வெள்ளிக்கிழமை) விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். உலக சுற்றுலா தினமான 27.9.22 அன்று விருது வழங்கப்படும். 

Tags:    

மேலும் செய்திகள்