தமிழ்செம்மல் விருது பெற விண்ணப்பிக்கலாம்

திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்செம்மல் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சாருஸ்ரீ கூறினார்.

Update: 2023-09-13 18:57 GMT

திருவாரூர்;

திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் தமிழ்த்தொண்டாற்றி வரும் தமிழ் ஆர்வலர்களுக்கு பெரிதும் ஊக்கமளிக்கும் வகையில் தமிழ்ச் செம்மல் விருது, தமிழ் வளர்ச்சித்துறையால் 2015-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதுக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள தமிழ் ஆர்வலர்களை தேர்வு செய்து மாவட்டத்துக்கு ஒருவர் என்ற முறையில் தமிழ் செம்மல் விருதும், விருது பெறுபவர்கள் ஒவ்வொருவருக்கும் விருது தொகையாக ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.திருவாரூர் மாவட்டத்திலுள்ள தமிழ் ஆர்வலர்களிடமிருந்து 2023-ம் ஆண்டுக்கான தமிழ்ச்செம்மல் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இவ்விருதுக்குரிய விண்ணப்பப்படிவத்தை தமிழ் வளர்ச்சித்துறையின் www.tamilvalarchithurai.com என்ற வலைத்தளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.விருதுக்கான விண்ணப்பப் படிவத்தை உரியவாறு நிறைவு செய்து, திருவாரூர் மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் அடுத்த மாதம் (அக்டோபர்) 5-ந் தேதிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் அணுகலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்