தேசிய நல்லாசிரியர் விருதுக்கு 15-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் - கல்வித் துறை தகவல்

2024ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு 15-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Update: 2024-07-04 15:36 GMT

சென்னை,

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் இந்தியா முழுவதும் சிறப்பாகப் பணியாற்றி வரும் ஆசிரியர்களின் சேவையை பாராட்டி மத்திய, மாநில அரசுகள் சார்பில் நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் 2024-ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு http://nationalawardstoteachers.education.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று கல்வித் துறை தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை தலைவராக கொண்ட மாவட்டக் குழு விண்ணப்பித்த ஆசிரியர்களில் தகுதியானவர்களை தேர்வு செய்து மாநில தேர்வுக் குழுவுக்கு வருகிற 25-ந்தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

இந்த மாவட்ட தேர்வுக் குழுவில் மாநில பிரதிநிதியாக ஒருவரும், மாவட்ட கலெக்டரின் பிரதிநிதியாக சிறந்த கல்வியாளர் ஒருவரும் இடம்பெற்று இருப்பார்கள். தேசிய நல்லாசிரியர் விருதுக்கான தகுதியுள்ள ஆசிரியர்களை தேர்வு செய்யும் போது, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இயக்குனர் அளித்திருந்த வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்