மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம்

மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம்

Update: 2023-06-09 19:22 GMT

மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சி பகுதிகளில் உள்ள சுய உதவிக் குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், வட்டார அளவிலான கூட்டமைப்புகள் மற்றும் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் சிறப்பாக செயல்படும் சுய உதவிக் குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்புகள் மற்றும் நகர அளவிலான கூட்டமைப்புகள் ஆகியவைகளுக்கு 2022-23-ம் ஆண்டிற்கான மணிமேகலை விருது வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி திருச்சி மாவட்டத்தில் கிராம ஊராட்சி பகுதிகளில் உள்ள சுய உதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், வட்டார அளவிலான கூட்டமைப்புகள் மற்றும் கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் சிறப்பாக செயல்படும் சுய உதவிக் குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்புகள் மற்றும் நகர அளவிலான கூட்டமைப்புகள் ஆகிய சமுதாய அமைப்புகளிடம் இருந்து தகுதியான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி மணிமேகலை விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதி வாய்ந்த விண்ணப்பங்களை மாவட்ட கலெக்டர் வளாகத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலகத்தில் வருகிற 25-ந்தேதி சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. மேற்கண்ட தகவலை திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்