மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம்

மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-04-14 18:54 GMT

மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம்தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில் கிராம ஊராட்சி பகுதிகளில் சுய உதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு, கள பகுதி அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள சுய உதவிக்குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு மற்றும் நகர்ப்புற அளவிலான கூட்டமைப்பு ஆகியவை செயல்பட்டு வருகிறது. அவற்றில் மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் 2022-23-ம் நிதி ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட குழுக்களுக்கு மணிமேகலை விருது வழங்குவதற்கு சமுதாய அமைப்புகள் தேர்வு செய்யப்பட உள்ளது. எனவே, சிறந்த முறையில் குழு கூட்டங்கள், நிர்வாக சுழற்சி முறை மாற்றம், நிதி வரவு-செலவு, மேற்கொள்ளும் தொழில், தரம் மற்றும் தணிக்கை, வங்கி கடன், அடிப்படை பயிற்சி மற்றும் தொழில்கள் பயிற்சி, விழிப்புணர்வு விவரங்கள், சமுதாய மேம்பாட்டு பணியில் ஈடுபட்ட விவரம், கிராம சபை பங்கேற்பு, மாற்றுத்திறனாளி மற்றும் முதியோர் மேம்பாட்டில் பங்கு ஆகியவற்றில் சிறப்பாக செயல்படும் மேற்கண்ட குழுக்கள், கூட்டமைப்புகள், சங்கங்கள் இதற்கான விண்ணப்பங்களை தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க வட்டார அலுவலகங்களிலும் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலகத்திலும் வருகிற 25-ந்தேதி வரை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அளிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 04238-225362 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம், என்று கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்