மனிதாபிமான செயல்களுக்கான விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்

மனிதாபிமான செயல்களுக்கான விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-06-29 19:11 GMT

பெரம்பலூர் மாவட்டத்தில் நீரில் மூழ்குதல், விபத்துகள், தீ விபத்துக்கள், மின்கசிவுகள், நிலச்சரிவுகள், விலங்குகள் தாக்குதல் மற்றும் சுரங்கங்களில் மீட்பு நடவடிக்கை மேற்கொண்டு ஒரு நபரின் உயிரை காப்பாற்றும் மனிதாபிமான செயல்களுக்காக ஜீவன் ரக்ஷா பதக்க விருதுகள் வழங்கப்படவுள்ளது. இந்த விருதுகள் பெற தகுதியான பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஒரு பக்க அதற்கான குறிப்புரையுடன் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ இன்று (வெள்ளிக்கிழமை) விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 04328-225474 என்ற அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம், என்று கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்