பசுமை சாம்பியன் விருது பெற விண்ணப்பிக்கலாம்

பசுமை சாம்பியன் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் மெர்சி ரம்யா கூறினார்.

Update: 2023-05-24 18:30 GMT

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் மஞ்சப்பை விருது பெற தகுதியானவர்களை தேர்வு செய்வதற்காக 3 நபர்கள் கொண்ட குழுவினை தேர்வு செய்வது குறித்தும், பசுமை சாம்பியன் விருதிற்கு தகுதியானவர்களை தேர்வு செய்வதற்காக 2 நபர்கள் கொண்ட குழுவினை தேர்வு செய்வது குறித்தும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுடன் விவாதிக்கப்பட்டது. அதன்பின்னர் கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவிக்கையில், தமிழக அரசின், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு தங்களை முழுமையாக அர்ப்பணித்தவர்களுக்கு, தனிநபர்கள், அமைப்புகளுக்கு பசுமை சாம்பியன் விருது 100 நபர்களுக்கு வழங்கி, தலா ரூ.1 லட்சம் வீதம் பண முடிப்பும் வழங்கப்பட உள்ளது. இந்த விருது தேர்வு செய்யும் குழு மூலம் மாநிலம் முழுவதும் தகுதி வாய்ந்த 100 தனி நபர்கள், நிறுவனங்களை ஒவ்வொரு வருடமும் தேர்வு செய்யும். இதற்கான விண்ணப்பப் படிவத்தை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய வலைதளத்தில் (www.tnpcb.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் கூடுதல் தகவல்கள் தேவைப்படுவோர் புதுக்கோட்டை மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரைஅணுகலாம்'' என்றார். கூட்டத்தில், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் செல்வக்குமார், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) (பொறுப்பு) பழனிச்சாமி உள்பட அதிகாரிகள், மாவட்ட கல்வி அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்