பசுமை சாம்பியன் விருது பெற விண்ணப்பிக்கலாம்
பசுமை சாம்பியன் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு தங்களை முழுமையாக அர்ப்பணித்தவர்களுக்கு அதாவது தனிநபர்கள், அமைப்புகளுக்கு தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருது 100 பேருக்கு வழங்கி, தலா ரூ.1 லட்சம் வீதம் பண முடிப்பும் வழங்க உள்ளது. இதற்கான விண்ணப்ப படிவத்தை அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து வருகிற ஏப்ரல் மாதம் 15-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் அரியலூர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரை நேரில் அணுகலாம் என்று மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.