கண்காணிப்பு கேமராக்கள் பழுது பார்த்தல்-சணல் பை தயாரித்தலுக்கான இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
கண்காணிப்பு கேமராக்கள் பழுது பார்த்தல்-சணல் பை தயாரித்தலுக்கான இலவச பயிற்சிக்கு நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூரில் திருச்சி மெயின் ரோட்டில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல், பழுது பார்த்தல் பயிற்சி மற்றும் பெண்களுக்கான சணல் பை தயாரித்தல் ஆகியவைக்கு இலவச பயிற்சிக்கு விண்ணப்பங்கள் நாளைக்குள் (வெள்ளிக்கிழமை) வரவேற்கப்படுகின்றன. வருகிற 18-ந்தேதி முதல் பயிற்சி தொடங்குகிறது. 18 முதல் 45 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். எழுத படிக்க தெரிந்தால் போதும். ஆதார் கார்டு நகல், ரேஷன் கார்டு நகல், மாற்று சான்றிதழ் நகல், 100 நாள் வேலை அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-4, வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை கொண்டு செல்ல வேண்டும். பயிற்சி முடிந்ததும் தொழில் தொடங்குவதற்கு வங்கி கடன் பெற தேவையான ஆலோசனைகள் வழங்கப்படும், என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.