டாக்டர் அம்பேத்கர் விருது பெற விண்ணப்பிக்கலாம்
டாக்டர் அம்பேத்கர் விருது பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்;
சிவகங்கை, அக்.21-சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- தமிழ் வளர்ச்சிக்கு பாடுபடும் மற்றும் பட்டியல் இனமக்களின் முன்னேற்றத்திற்கு அரிய தொண்டு செய்யும் ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்த தமிழறிஞர்கள், கவிஞர்கள், சான்றோர் ஆகியோர்களில் சிறந்தோர்க்கு, 2024-ம் ஆண்டில் திருவள்ளுவர் திருநாளன்று டாக்டர் அம்பேத்கர் விருது வழங்குவதற்கு ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன. எனவே சிவகங்கை மாவட்டத்தில் டாக்டர் அம்பேத்கர் விருது பெற விரும்பும் தகுதிவாய்ந்த நபர்கள், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் அணுகி உரிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தினை நேரில் சமர்ப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.