மத்திய அரசின் பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்
மத்திய அரசின் பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்தார்.
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று கலை, இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், சமூகப்பணி, அறிவியல் மற்றும் பொறியியல், பொது விவகாரம் சிவில் சேவை, வர்த்தகத்தொழில் போன்றவற்றில் சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகிறது. அதன்படி அடுத்த ஆண்டு வழங்கப்பட உள்ள இந்த விருதுகளுக்கான விரிவான வழிகாட்டி நெறிமுறைகளை www.padmaawards.gov.in என்ற இணையதள பக்கத்தில் மத்திய அரசு வெளியிட்டு உள்ளது. விருதிற்காக விண்ணப்பிப்பவர்கள் உரிய விண்ணப்பத்தினை 21.7.23-க்குள் ராமநாதபுரம் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் நேரில் கொடுக்க வேண்டும் என்று கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.