விண்ணப்பிக்கலாம்
நாகை மாவட்டத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் புதிய மின்னணு குடும்ப அட்டை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் புதிய மின்னணு குடும்ப அட்டை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதிய மின்னணு குடும்ப அட்டை
பிற மாநிலங்களிலிருந்து தொழில் நிமித்தமாக, தமிழ்நாட்டில் நீண்டகாலமாக குடும்பத்துடன் வசிக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு, புதிய மின்னணு குடும்ப அட்டை வழங்க தமிழ்நாடு அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிற மாநிலத்திலிருந்து தொழில் நிமித்தமாக நாகை மாவட்டத்திற்கு புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் e-Shram இணையதளத்தில் பதிவு செய்துள்ள, தகுதியான தொழிலாளர்களில் இதுநாள் வரை குடும்ப அட்டை பெறாத தொழிலாளர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டை வழங்கப்பட உள்ளது.
அதேபோல பதிவு செய்யாத தொழிலாளர்களும் இந்த, இணையதளத்தில் பதிவு செய்து, புதிய குடும்ப அட்டை கோரி விண்ணப்பிக்க வேண்டும்.
உரிய ஆவண நகல்களுடன்
எனவே, நாகை மாவட்டத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள தாலுகா அலுவலகங்களில் வட்ட வழங்கல் அலுவலரிடம் படிவத்தினை பெற்று, உரிய ஆவண நகல்களுடன் பூர்த்தி செய்து வட்ட வழங்கல் அலுவலகத்தில் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.