ஆயுஷ் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

ஆயுஷ் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் விநியோகம் இன்று முதல் தொடங்கியுள்ளது.;

Update: 2022-09-21 10:04 GMT

சென்னை,

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் ஆயுஷ் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை http://tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதில், பி.எஸ்.எம்.எஸ்., பி.ஏ.எம்.எஸ்., பி.யு.எம்.எஸ்., பி.எச்.எம்.எஸ்., ஆகிய படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குனர் அலுவலகத்திற்கு அக்டோபர் 12-ம் தேதி மாலை 5.30 மணிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்