நிரந்தர மக்‌கள்‌ நீதிமன்றத்தில்‌ உறுப்பினர்‌ பதவிக்கு விண்ணப்பம்‌

ஊட்டியில் நிரந்தர மக்‌கள்‌ நீதிமன்றத்தில்‌ உறுப்பினர்‌ பதவிக்கு விண்ணப்பம்‌ அளிக்கலாம்.

Update: 2022-07-28 14:40 GMT

ஊட்டி

நீலகிரி மாவட்ட நீதிபதி பி.முருகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஊட்டி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில்‌ உள்ள நிரந்தர மக்கள்‌ நீதிமன்றத்தில்‌ உறுப்பினராக பணிபுரிய விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன. பயணியள் அல்லது பொருட்களை விமானம்‌, சாலை, நீர்‌ போக்குவரத்து மூலம்‌ கொண்டு செல்வதற்கான ஒளி அல்லது நீர்‌ வழங்குதல்‌, பொது பாதுகாப்பு அல்லது சுகாதார அமைப்பு, மருத்துவமனை அல்லது மருத்துவ சேவை காப்பீட்டு சேவை, கல்வி மற்றும்‌ கல்வி நிறுவணங்கள்‌ ஆகிய துறைகளில்‌ பணிபுரிந்த அனுபவம்‌ பெற்று இருக்க வேண்டும்‌.

62 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும்‌. ஒரு அமர்வுக்கு இணைய தளத்தில்‌ விண்ணப்பங்களை பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தபால்‌ மூலம்‌, தலைவர்‌, மாவட்ட நீதிபதி, நீலகிரி மாவட்ட சட்டப்‌ பணிகள்‌ ஆணைக்‌ குழு, ஊட்டி 643 001 என்ற முகவரிக்கு வருகிற ஆகஸ்டு‌ 12-ந் தேதிக்குள்‌ கிடைக்கும்‌ படி அனுப்ப வேண்டும்‌. மேலும் விவரங்களுக்கு 0423-2966296 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்