விழுப்புரம் அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் மூலம் விண்ணப்ப பதிவேற்றம் செய்யலாம் முதல்வர் தகவல்

விழுப்புரம் அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் மூலம் விண்ணப்ப பதிவேற்றம் செய்யலாம் என கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.;

Update: 2022-07-07 14:53 GMT

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை 2022-23-ம் கல்வியாண்டிற்கான விண்ணப்பங்களை www.tngasa.in மற்றும் www.tngasa.org என்ற இணையதள முகவரிகளில் பதிவு செய்யலாம் என தமிழக அரசின் உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

அதன்படி இணையதளம் மூலம் விண்ணப்ப பதிவினை பதிவேற்றம் செய்யலாம். மேற்கண்ட இணையதளங்கள் மூலம் மாணவர்கள், தாங்கள் சேர விரும்புகிற கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவுகளுக்கு ஒரே விண்ணப்பம் மூலம் விண்ணப்பிக்கலாம். ஒரு கல்லூரிக்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்ப கட்டணம் ரூ.48 மற்றும் பதிவு கட்டணம் ரூ.2 ஆகும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் எதுவுமில்லை. பதிவு கட்டணம் மட்டும் ரூ.2 செலுத்த வேண்டும். விண்ணப்பம் மற்றும் பதிவு கட்டணத்தை இணையதளம் மூலம் செலுத்தலாம்.

இணையவழியில் விண்ணப்பிக்கலாம்

அவ்வகையில் விழுப்புரம் அரசு கலைக்கல்லூரியில் பயிற்றுவிக்கப்படும் இளநிலை பட்டப்படிப்புகளில் சேர விரும்புவோர் இணையவழியில் விண்ணப்பிக்கலாம். விழுப்புரம் அரசு கலைக்கல்லூரியில் அனைத்து பாடங்களும் சுழற்சி-1, சுழற்சி-2 என இரு நேரங்களில் இயங்குவதால் விருப்பம்போல் இரு சுழற்சிக்கும் விண்ணப்பிக்கலாம். மேலும் கணினி பயிற்சியும், மென்திறன் பயிற்சியும் வழங்கப்படுகிறது. கல்லூரியில் தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித்திட்டம், செஞ்சுருள் சங்கம், யோகா ஆகியவை திறம்பட செயல்படுகின்றன.

இந்த தகவலை கல்லூரி முதல்வர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்