அப்பியாபாளையம் அரசு பள்ளி மாணவர்கள் 3 பேர் தேர்ச்சி

அப்பியாபாளையம் அரசு பள்ளி மாணவர்கள் 3 பேர் தேர்ச்சி

Update: 2023-04-18 09:57 GMT

 பெருமாநல்லூர்

தமிழகம் முழுவதும் கடந்த பிப்ரவரி மாதம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 8-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு தேசிய திறனாய்வு போட்டி தேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் அப்பியாபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் ரீனா, தர்ஷினி, கரிகாலச் சோழன் ஆகிய மூன்று பேரும் மாநில அளவில் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியர்,ஆசிரியர்கள், பெற்றோர்-ஆசிரியர் கழக நிர்வாகிகள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பாராட்டினர். மேலும் இத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு ரூ.48 ஆயிரம் வரை கல்வித்துறை மூலம் வழங்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்