சிறுபான்மை மக்களுக்கு கடன் வழங்க வேண்டுகோள்

சிறுபான்மை மக்களுக்கு கடன் வழங்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது.;

Update:2023-10-06 00:07 IST

தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மாவட்ட மாநாடு பெரம்பலூரில் நடைபெற்றது. இதில், சிறுபான்மை மக்களின் மீதான தாக்குதல்களை தடுத்து பாதுகாப்பு வழங்கிட வேண்டும். அரசியல் சட்டப்படியான மதசார்பின்மையை பாதுகாக்க வேண்டும். சிறுபான்மை மக்களுக்கு சிறு கடன் வழங்க வேண்டும். ஏழை சிறுபான்மை மக்களுக்கு புதிய பகுதிகளில் குடியிருப்புகள் கட்டுவதற்கு நிலம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். பொது சிவில் சட்டத்திற்கு எதிராக கேரளாவை போல் தமிழக சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். நீதிக்கு புறம்பாக சிறை வைக்கப்பட்டுள்ள முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்வதற்கு முன்வர வேண்டும். சிறுபான்மை மக்களின் வழிபாட்டு உரிமைகளும், வழிபாட்டு தலங்களும் தாக்குதலுக்கு உள்ளாவதை தடுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்