67 பயனாளிகளுக்கு அடுக்குமாடி ஒதுக்கீடு ஆணை

67 பயனாளிகளுக்கு அடுக்குமாடி ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டது.

Update: 2022-06-10 18:17 GMT

கரூர்,

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பாக 67 பயனாளிகளுக்கு அடுக்குமாடி ஒதுக்கீடு ஆணைகளையும், 348 பயனாளிகளுக்கு வீடு கட்டிக்கொள்ள பணி ஆணைகளையும் கலெக்டர் பிரபுசங்கர் வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:-தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டி முடிக்கப்பட்டுள்ள ரூ.270.15 கோடி மதிப்பீட்டில் 9 அடுக்குமாடி திட்டப்பகுதிகளை திறந்து வைத்து நகர்ப்புற பகுதிகளில் ரூ.2.10 லட்சம் மானியத்துடன் பயனாளிகளே வீடு கட்டிக்கொள்ள பணி ஆணைகளை வழங்கினார்.

கரூர் மாநகராட்சி சணப்பிரட்டியில் ரூ.1608.28 லட்சங்கள் திட்ட மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 192 அடுக்குமாடி குடியிருப்புகளில் 67 பயனாளிகளுக்கான குடியிருப்பு ஒதுக்கீடு ஆணைகளையும், மாவட்டத்தின் நகர்ப்புற பகுதிகளில் சொந்த வீட்டுமனை வைத்திருந்து கான்கிரீட் வீடு இல்லாதவர்களுக்கு ரூ.3 லட்சத்திற்கு குறைவான ஆண்டு வருவாய் உள்ள 348 பயனாளிகளுக்கு ரூ.2.10 லட்சம் மானியத்துடன் பயனாளிகளே வீடு கட்டிக்கொள்ள பணி ஆணை வழங்கப்பட்டது, என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்